திருக்குறள்
– சிறப்புரை : 721
வகையறிந்து
வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த
தூய்மை யவர்.
--- ௭௨௧
சொற்களின் தொகைவகை அறிந்த சான்றோர், அவையில் குழுமியிருக்கும் அறிவிற்சிறந்தோர் தன்மை
அறிந்து, வாய் சோர்ந்தும் குற்றம் நேராமல் பேசுதல் வேண்டும்.
“
அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருள்
ஆகக் கொள்வர் புலவர். – நாலடியார்.
அருள் காரணமாக அறம் வலியுறுத்தும் அன்புடைய பெரியோரது வாய்மொழியை அறிவுடையோர்
பெரும் பயனுடையதாக மதித்து ஏற்றுக்கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக