திருக்குறள்
– சிறப்புரை : 714
ஒளியார்முன்
ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம்
கொளல்.
---- ௭௧௪
கற்றோர் கூடிய அவையில் உரையாற்றும்பொழுது
அவர்கள் பாராட்டுமாறு பேச வேண்டும் ; கல்லார் நிறைந்த அவையில் உரையாற்றும்பொழுது தம்
புலமைத் திறத்தைக் காட்ட முனையாது அவர்கள் புரிந்துகொள்ளுமாறு இயல்பாகப் பேச வேண்டும்.
“கைஞ்
ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
சொல் ஞானம் சோர விடல்.”
--- நாலடியார்.
அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே, நல்லது சொல்ல
வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக