திருக்குறள்
– சிறப்புரை : 717
கற்றறிந்தார்
கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல்
வல்லா ரகத்து.
– ௭௧௭
குற்றமற்ற பொருள்பொதிந்த சொற்களை ஆராய்ந்து அறியும் சான்றோர் அவைக்கண்
ஒருவன் உரைப்பானாயின் பல நூல்களையும் கற்றுத்தேர்ந்த கல்வியின் சிறப்பு யாவர்க்கும்
விளங்கித் தோன்றும்.
“
கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின
வேந்தன் அவை காட்டும் ….” –பழமொழி.
பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல்வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையையும்
சொல்வன்மையையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக