செவ்வாய், 14 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 706

திருக்குறள் – சிறப்புரை : 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். ----- ௭0௬
தன்னுள் நுழைந்திருக்கும் நூலினை(பொருளை) வெளிக்காட்டும் பளிங்குபோல் ஒருவர் நெஞ்சில் மறைந்திருக்கும்  எண்ணங்களை முகமே காட்டி விடும்.
“ காமம் கனைந்து எழக் கண்ணின் களி எழ.”---பரிபாடல்.
நெஞ்சத்தில் காமக் களிப்பு எழ, அது கண்களிலே வெளிப்பட்டுப் புறத்தார்க்குப் புலப்படத் தோன்றும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக