திருக்குறள்
– சிறப்புரை : 697
வேட்பன சொல்லி
வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும்
சொல்லா விடல்.
--- ௬௯௭
ஆக்கம் கருதி அரசன் விரும்பிக் கேட்பவற்றை மட்டுமே சொல்லி எக்காலத்தும் பயன்தராதனவற்றை அரசன் விரும்பிக் கேட்டாலும் சொல்லற்க.
”கருத்திலா
இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத்
திருத்தலாம்
ஆகின் நன்றே திருத்துக…..” கம்பன்.
மன்னன் மக்களைக் காக்கும் கருத்தின்றித்
தீமை செய்யக் கருதுவானாயின் அவ்வாறு அவன் செய்யாது காத்து அவனைத் திருத்துதல் சான்றோர்
கடனாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக