திருக்குறள்
– சிறப்புரை : 711
அவையறிந்து
ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த
தூய்மை யவர்.
– ௭௧௧
சொற்களின் தொகையறிந்த தூய அறிவுடையாராதல் வேண்டின் அவையின்கண் உரையாற்றுங்கால்
கேட்போர் திறனறிந்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்த சொற்களையே சொல்லுதல் வேண்டும்.
“
உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்
வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே.
–தொல்காப்பியம்.
உயர்ந்தோர் கூற்று உலக வழக்கொடு பொருந்தி அமைதலால், அதனை வழக்கு வழிப்படுத்தல்
செய்யுளுக்கு உரியதோர் முறைமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக