செவ்வாய், 31 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 696

திருக்குறள் – சிறப்புரை : 696
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில்
வேண்டுப வேட்பச் சொலல். ---- ௬௯௬
அரசனின் உளக்குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாத மனநிலை அறிந்து சொல்ல வேண்டிய செய்தியை அவன் விரும்பிக் கேட்குமாறு சொல்ல வேண்டும்.
“இனத்தினான் ஆகும் பழி புகழ் தம் தம்
மனத்தினான் ஆகும் மதி.” ----சிறுபஞ்சமூலம்.

மக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக