சனி, 28 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 693

திருக்குறள் – சிறப்புரை : 693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. --- ௬௯௩
மன்னரின் சுற்றத்தார் யாவரும் மன்னரோடு தமக்குள்ள உறவைப் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமாயின் தம்மீது குற்றம் குறைகள் நேராவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் ; அரசனுக்கு எவர்மீதாவது ஐயம் ஏற்பட்டுவிடின் அதனைத் தீர்த்தல் என்பது யார்க்கும் எளிதன்று.
“ சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசு அறக்கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்.” –குறிஞ்சிப்பாட்டு.

சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் குறையுமென்றால் அவற்றைக் குற்றமற நீக்கிப் புகழை நிலை நிறுத்தல் என்பது தெளிந்த அறிவுடைய பெரியோர்க்கும் எளிதில்லை என்று கூறுவர் சான்றோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக