வெள்ளி, 6 அக்டோபர், 2017

எழுத்துடை நடுகல்

எழுத்துடை நடுகல்
விழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் …….  
                                                      --- ஓ தலாந்தையார், ஐங். 352: 1-2
விழுமிய அம்பு தொடுத்தலை உடைய மறவர் தம் வில்லினின்று விடுத்த அம்பினால் உயிர் நீத்து வீழ்ந்த கரந்தை வீரர் பொருட்டுப் பெயரும் பீடும் பொறித்து நட்ட நடுகல்…
(அக்காலத்துத் தமிழ் எழுத்துகள் பற்றிய வரலாறு  இதனாற் புலப்படும் ; மேலும் காண்க : அகநா. 53 ; புறநா. 264.)
 ……………………………… ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்.  
                                            –மதுரை மருதனிளநாகனார், அகநா. 131: 9-11.
 ஆநிரை மீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும்  சிறப்பினைக் கொண்ட நடுகல்…
 குயில் எழுத்து
 இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடிக்
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்.
                                      --–மதுரை மருதனிளநாகனார், அகநா. 297: 5-10.
 அழகிழந்த பொலிவற்ற தாடியினையும் அஞ்சாமையையும் உடைய மறவர்கள் தம் அம்புகளை அச்சம் தரும் நடுகல்லில் தீட்டுவர் ; அதனால் பக்கம் தேய்ந்து மெலிந்துபோன நடுகல்லில் பெயரும் பெருமையும் விளங்கத் தோன்றுமாறு பொறிக்கப்பட்ட எழுத்துகளை ஒன்று சேர்த்துப் பொருள் பொருத்தமுடன் படித்துப் பார்க்க இயலாதவராய், வழிநடை வருத்தத்தால் தளர்ச்சியுடன் செல்லும் வழிப்போக்கர்கள் அதனை விடுத்து அகன்று செல்வர். (குயில் எழுத்து – பொறித்த எழுத்து)
 மரங்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்றலை சிதைத்த வன்றலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குற்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
                                       --–மதுரை மருதனிளநாகனார், அகநா. 343: 4-8.
 வண்டியினைக்கொண்ட உப்பு வணிகனது, பெயர்ந்து செல்லும் உருளின் பொலிவில்லாத பூண், சிதையச் செய்த வலிய பாறையில் உள்ள நடுகல்லின், இடப்பெற்ற கண்ணி வாடப்பெற்றதும் நீராட்டப் பெறாததுமாகிய இடத்தில் கூரிய உளியால் இயற்றப்பெற்ற கீற்றுகள் மறைந்த எழுத்துகள், அவ்வழியிலே செல்லும் புதியவர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும்.
 “ நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும். இவற்றை ‘வீரக்கற்கள்’ என்றும் கூறுவர். நினைவுக்கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும் ’பெருங்கற்காலம்’  முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. ‘இந்தியாவிலும்’ வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், ’வீரச்சாவு’ அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக்கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
  நம் பண்டைய தமிழர்கள் வெட்சி, கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டுவந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர்.
  இந்தியாவில் நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் வடக்கே இமாச்சலப் பிரதேசம், குசராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் உட்பட்ட பல இடங்களில் இவை உள்ளன. தென்னிந்தியாவிலும் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பழங்கால நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் முனைவர் கேசவராஜ் எழுதிய நூலின் அடிப்படையில் தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்திலேயே அதிக அளவாக 397 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 202 நடுகற்களும் ஆந்திராவில் 126 நடுகற்களும் கேரளாவில் ஒரு கல்லும் அறியப்பட்டுள்ளன.
 சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களைப்பற்றியதாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக் கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.  நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனை பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன, ‘கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே’ என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்.”—விக்கிபீடியா.
(In Tamil Nadu ) “The hero stones found were erected in memory of  heroes  who laid their life, defending  their territory or making some form of  supreme  sacrifice for the sake of the community  or the region. Usually these stones, now called by scholars as ‘Virakkal’ or Hero stones, shoe the figure of the hero carved with inscriptions, giving details of the hero, the battle, the king in whose time the battle took place and the person who erected the stone. Either they stand along or in groups and are usually found outside the village limits, nearby a tank or lake.
 Some of the hero stones with inscriptions were exactly in the form of Dolmens with three upright slabs and capping stone. The figure of the hero is generally carved on the back slab facing the entrance as if it is a temple shrine and the figure of the hero, an image of a god. Plain dolmens were also found without any figures or writings by the side of such hero stones, indicating that they were contemporary with the nearby hero stone. Such inscribed hero stones have been found from almost 3rd c.CE to the 16th c.CE attested by inscriptions. Obviously the tradition continued till very late.
 The ancient Sangam literature refers to a large number of hero stones and the circumstances under which those were erected. The Sangam works, mainly the Purananuru anthology, refer to the memorial stones as ‘nadukal’ or simply ‘kal’ in the context.” --- Tamil Nation.
பன்னெடுங்காலத்திற்கு முன்பே சங்கச் சான்றோர்  தமிழர்தம்  வீரமும் பெருமையும் விளங்கும்படியாக நடுகல் வழிபாடு குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் எழுத்து வரலாற்றை அறிய நடுகற்கள் பேருதவி புரிகின்றன.அண்மையில் நிகழ்த்தப்படும் (கீழடி, அழகன் குளம், அரிக்கமேடு) அகழாய்வுகளில் எழுத்துகள் பொறித்த சுடுமண் பானை ஓடுகளைக் கண்டெடுத்துள்ளனர். பானை ஓடுகளிலும் கல்கருவிகளிலும் காணப்படும் எழுத்துகள் யாவும் தொன்மைத் தமிழ் எழுத்துகளே, அவற்றைத்  தமிழி என்று கூறாது பிராமி  என்று கூறுவது ஏனோ..?
”The major problem with this model is the fact that horses played a very important role in all Indo-European cultures, being a people constantly on the move. "There is no escape from the fact that the horse played a central role in the Vedic and Iranian cultures..." (Parpola, 1986) Sidenote: "Vedic" means from the time of the Vedas, the earliest text in India, and the Vedic culture is from around 1500 to 500 BC. However, no depiction of horses on seals nor any remains of horses have been found so far before 2000 BC. They only appear after 2000 BC. Very likely there were no Aryan speakers present before 2000 BC in the Indus Valley.” -- Indus Valley.
மிகத் தொன்மைவாய்ந்த சிந்துசமவெளி நாகரிகத்திற்கு உரியவர்கள் தமிழர்கள் என்பதை அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரிய நாகரிகத்தைக் கொண்ட தமிழ் மக்கள் பேசிய மொழி, வேதகால ஆரியத்திற்கு முற்பட்டதென்பதை அறிஞர் அசுகோல பர்போலா உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் தமிழ் எழுத்துவரலாறு கணிக்க இயலாத கால எல்லையைக் கடந்து செல்கிறது.

Editorial
Hero Stone / Tombstone
 “ The hero stones are so called because of heroism shown by warriors ao the eve of fighting in battlefields. They are killed when the arrows pierce their bodies. References to such hero stones erected in memory of  warriors  are found in a number of poems in Sangam literature  such as Puurananooru, Akananooru and Kuruntogai.
 Members of warrior-clan known as Maravars sometimes  sharpen their arrows by scratching them on the wayside tombstones and hence the names of the warriors inscribed on the stones gets erased. This is what we understand from poem (297)  by MaruthanIlanaganar in Akananooru.

 Erection of hero stones establish the fact of not only a heroic death of the warriors but also the prevalence of literacy in ancient times. These tombstones  of heroes are found from Kashmir to Kanyakumari and even beyond up to Kerala. Dr.Kesavaraj has written in his research that in Karnataka there were 397 stones in TamilNadu 202, in Kerala only one stone. The Dept. of Archaeology Tamil Nadu has said that in Tamil Nadu a large number of of such stones are found in North and South Arcot districts. Many hero stones show the figure of the hero stones along with other details. They all indicate the ancienty of  Tamil culture.” –Editor.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக