செவ்வாய், 10 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 676

திருக்குறள் – சிறப்புரை : 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். --- ௬௭௬
ஒரு செயலைச் செய்ய முயலுங்கால் அதனை முடிக்கும் வழிமுறைகளையும் ஏற்படும் இடையூறுகளையும் மனங்கலங்காது முயன்று முடிக்கும் நிலையில் அதனால் விளையும் பயன்களையும் ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும்.
“ நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
  இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்.” –புறநானூறு.

நல்வினையால் வரும் நன்மையும் தீவினையால் வரும் தீமையும் இல்லை என்போர்க்கு நட்புடையன் ஆகாமல் விலகி இருப்பாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக