வியாழன், 5 அக்டோபர், 2017

வெற்றிடம்

வெற்றிடம்
குணகடல் இவர்ந்து குரூஉக் கதிர்பரப்பிப்
பகல்செய் செல்வன் குடமலை மறைய
மதுரைக் கள்ளம் போதனார். நற் 215 : 1 -2
கதிரவன் – கீழ்த் திசைக் கடலினின்று எழுந்து நல்ல நிறம் பொருந்திய கதிர்களைப் பரப்பி பகற்பொழுதைச் செய்து; மேற்குத் திசை மலைக்கண் மறைந்தனன்.
” தமிழகத்திலே பழைய நாளிலே வானநூல் எண்ணூல் குறிநூல் மருத்துவநூல் முதலிய பலகலைகளும் விளக்க முற்றிருந்தன என்பதற்குப் பற்பல சான்றுகள் உள்ளன. அவற்றுள் வானநூல் எங்ஙனம் வளம் பெற்றிருந்ததென்பதனை ஈண்டுச் சிறிது விளக்குதும். அவற்றுள் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் நல்லிசைப் புலவர் நலங்கிள்ளி யென்னும் சோழ வேந்தனைப் பாடிய புறப்பாட்டொன்றில்
 செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப்
  பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
  வளி திரிதரு திசையும்
  வறிது நிலைஇய காயமும் என்றிவை
  சென்றளந் தறிந்தோர் போல என்றும்
 இனைத்தென் போரும் உளரே …… (30)
என்று கூறி ஞாயிற்றின் செலவும் இயக்கமும் பார்வட்டமும் திசையும் விசும்பும் என்பவற்றை அளந்தறிதலின் அருமையையும் அவற்றை ஆண்டாண்டுச் சென்று அளந்தறிந்தோர்போல அவை இத்துணை அளவையுடையனவென்று வழுவின்றியுரைக்கும் அறிவுடையோரும் தமிழகத்திலே உளரென்பதனை புலப்படுப்பாராயினர். வானநூற்குரிய குறியீட்டுச் சொற்கள் தமிழின்கண் மல்கிக் கிடத்தலொன்றானே அக்கலை எவ்வளவு  வளர்ச்சியுற்றிருந்ததென்பது புலனாகும்.

கரிய கடல் சூழ்ந்த இப்பெரிய நிலவுலகத்தை….
 மயங்குஇருங் கருவிய  விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
                            மார்க்கண்டேயனார், புறநா. 365 : 1-3
தம்மிற் கலந்து மழை, மின்னல் முதலியவற்றின் தொகுதியை உடைய விசும்பை முகனாகவும் விசும்பின்கண் இயங்கும், ஞாயிறும் திங்களும் ஆகிய இருசுடர்களைக் கண்ணாகவும் கொண்ட , பலவகையாலும் மாட்சிமைப்பட்ட நிலமகள், இடம்விட்டு இடம் பெயரும்காற்று இயங்காத உயிர்களின் இயக்கம் அற்ற விசும்பைக் கடந்து.,.. நிலமகளுக்கு விசும்பு முகம் ; இருசுடர்கள் கண்.
அறிவியல் நோக்கு
வெற்றிடம் (vacuum) என்பது எந்த ஒரு பொருளும் இல்லாத இடம் ஆகும். பொதுவாக இயற்பியல் ஆய்வகங்களில் காற்றை நீக்குவதன் மூலம் வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. பிரபஞ்ச வெளி நாம் நினைப்பது போல வெற்றிடம் அன்று. ஏனெனில் அங்கேயும் சிறு சிறு பொருட்துகள்கள் உள்ளன. வெற்றிடத்தில் ஒளி பயணிக்கும், ஒலியோ பயணிக்க இயலாது. ஏனெனில் நெட்டலையான ஒலி பரவ திட, திரவ, வாயு ஊடகமொன்று அவசியம் தேவை.
இயற்கை வெற்றிடத்தை வெறுக்கும் என்பது இயற்பியலில் அனைவருமறிந்த ஒன்றாகும். வெற்றிடத்தின் அரண்கள் ஊடுருவக் கூடியதாய் இருப்பின் அது பொருட்களால் நிரப்பப்படும். இத் தத்துவமே உறிஞ்சி உபகரணங்கள் (suction apparatus), தூய்மையாக்கிகள் (vaccum cleaner) ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
In 350 BCE, Greek philosopher Aristotle suggested that nature abhors a vacuum, a principle that became known as the horror vacui. This concept built upon a 5th-century BCE ontological argument by the Greek philosopher Parmenides, who denied the possible existence of a void in space.[9] Based on this idea that a vacuum could not exist, in the West it was widely held for many centuries that space could not be empty.[10] As late as the 17th century, the French philosopher René Descartes argued that the entirety of space must be filled.[11]
In ancient China, there were various schools of thought concerning the nature of the heavens, some of which bear a resemblance to the modern understanding. In the 2nd century, astronomer Zhang Heng became convinced that space must be infinite, extending well beyond the mechanism that supported the Sun and the stars. The surviving books of the Hsüan Yeh school said that the heavens were boundless, "empty and void of substance". Likewise, the "sun, moon, and the company of stars float in the empty space, moving or standing still".[12]

The Italian scientist Galileo Galilei knew that air had mass and so was subject to gravity. In 1640, he demonstrated that an established force resisted the formation of a vacuum. However, it would remain for his pupil Evangelista Torricelli to create an apparatus that would produce a vacuum in 1643. This experiment resulted in the first mercury barometer and created a scientific sensation in Europe. The French mathematician Blaise Pascal reasoned that if the column of mercury was supported by air then the column ought to be shorter at higher altitude where the air pressure is lower.[13] In 1648, his brother-in-law, Florin Périer, repeated the experiment on the Puy de Dôme mountain in central France and found that the column was shorter by three inches. This decrease in pressure was further demonstrated by carrying a half-full balloon up a mountain and watching it gradually expand, then contract upon descent.[14] –Wikipedia. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக