வியாழன், 12 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 678

திருக்குறள் – சிறப்புரை : 678
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. --- ௬௭௮
பழக்கிய யானையைக்கொண்டு காட்டு யானையைப் பிடிப்பது போல,   மன ஊக்கம் கொண்ட செயல் திறனோடு, ஒரு செயலைச் செய்கின்றபோது அதனோடு தொடர்புடைய இன்னொரு செயலையும் செய்து முடிக்க வேண்டும்.
“…………………………………. வழும்பில் சீர்
நூல் கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது. ---நாலடியார்.

குற்றமில்லாத சிறப்புடைய நூல்களைக் கற்றாலும் நுட்பமான அறிவு இல்லாதவர், நூற்பொருளை அறியும் ஆற்றல் இல்லாதவரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக