திருக்குறள்
– சிறப்புரை : 675
பொருள்கருவி
காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச்
செயல்.
--- ௬௭௫
ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டிய அளவு பொருள், தேவையான கருவி, ஏற்ற
இடம் தகுந்த காலம், செயல் முடித்தற்குரிய மனவலிமை
ஆகிய இவ்வைந்தினையும் மயக்கமின்றி எண்ணிச் செய்தல் வேண்டும்.
“
நுண் உணர்வு இன்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் ..”
–நாலடியார்.
வறுமையாவது, நுட்பமான அறிவு இல்லாதிருப்பதே; மிகவும் வளர்ந்த பெரும் செல்வம் என்பது, நுட்பமான
அறிவு உடையவனாதலே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக