திருக்குறள்
– சிறப்புரை : 694
செவிச்சொல்லும்
சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா
ரகத்து. ---- ௬௯௪
பெருமை பொருந்திய மன்னன் அருகே இருக்கும்போது அவர்முன் ஒருவன் பிறரை நெருங்கி அவர் செவியில் சொல்வதையும்
பிறர் முகம் பார்த்துச் சிரித்தலையும் முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்; அமைதி காத்தல்
அவைக்கு நன்றாம்.
“தந்தையே
ஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது.” ---இனியவைநாற்பது.
தந்தையே ஆனாலும் அடக்கம் இல்லாதவன் ஆயின் அவன் சொல்லைக்கேட்டு நடவாமல்
இருப்பது நன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக