வெள்ளி, 27 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 692

திருக்குறள் – சிறப்புரை : 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.--- ௬௯௨
மன்னர்க்கு உரிய உயரிய  சிறப்புகளைத் தம் மன்னரும் விரும்பி ஏற்பனவற்றைத் தாமும் விரும்பாதிருத்தல் மன்னரைச் சூழ்ந்திருப்போர்க்கு நிலையான செல்வத்தைக் கொடுக்கும்.
“ வேய் உறழ் பணைத்தோள் இவளோடு
 ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே.” ---பதிற்றுப்பத்து.
வேந்தே…! பருத்த அழகிய தோள்களையுடைய நின் மனைவியோடு நீ. வெள்ளம் எனும் எண்ணிக்கை கொண்ட பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வாயாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக