திங்கள், 30 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 695

திருக்குறள் – சிறப்புரை : 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. ---- ௬௯௫
அரசன் பிறரோடு கமுக்க உரையாடும் பொழுது  ஒட்டுக் கேட்டலைச் செய்யாமலும் ஆவலால் தொடர்ந்து வினவி அறிந்துகொள்ள முயலாமலும் அமைதி காத்து  அரசனே மனம்விட்டுச் சொன்னால் மட்டுமே அறிந்துகொள்ள வேண்டும். “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்.”
“ தவம்செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
 அதன் பயம் எய்திய அளவை மான.” –பொருநராற்றுப்படை.

தவம் செய்வோர் தவம் செய்த உடம்புடனே அத்தவத்தின் பயனைப் பெற்றார் போல்..! பண்புடைமையாகிய உயர்ந்த ஒழுக்கமும் தவமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக