புதன், 18 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 684

திருக்குறள் – சிறப்புரை : 684
அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.—௬௮௪
மெய்ப்பொருள் அறியும் அறிவு; அரிதாகிய தோற்றப் பொலிவு; நூல்பல கற்று ஆராய்ந்து பெற்ற கல்வியறிவு என இம்மூன்றினும் நிறைவான தேர்ச்சிபெற்ற ஒருவனே தூது செல்லத் தகுதி உடையவனாவான்.
“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல” –நற்றிணை.
கொடிய நோய் உற்றவர்க்கு அவர் விரும்பியதைக் கொடுக்காது தகுந்த மருந்தை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவன் போல…. (வினையாற்றுக)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக