திங்கள், 23 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 689

திருக்குறள் – சிறப்புரை : 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.--- ௬௮௯
தூதன். அரசன் சொல்லியவாறு வழுவின்றி அப்படியே பகையரசரிடம் சொல்லும் பொழுது தன் அரசரின் புகழுக்குக் கேடு தரும் சொற்களை வாய்தவறியும் சொல்லாத துணிவு உடையவனே சிறந்த தூதன் ஆவான்.
“ பேணுப பேணார் பெரியோர் என்பது
 நாணுத் தக்கன்று அது காணுங்காலை.” –நற்றிணை.
ஒழுக வேண்டிய நெறியில் ஒழுகாது இருப்போரைப் பெரியோர் எனக் கூறுவது நாணத்தக்கதாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக