வெள்ளி, 13 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 679

திருக்குறள் – சிறப்புரை : 679
நாடார்க்கு நல்ல செயின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.---- ௬௭௯
ஒரு செயலைச் செய்ய விழைவான் தன் நண்பர்க்கு நன்மை செய்தலைவிட . தன்னோடு ஒட்டுறவு இல்லாதாரையும் விரைந்து நட்பாக்கிக்கொள்ள வேண்டும்.
“சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு. –நாலடியார்.

வயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை- அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் வலியச் சென்று அவர்தம் நட்பைக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக