திருக்குறள்
– சிறப்புரை : 667
உருவுகண்டு
எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தோர்க்கு
அச்சாணி அன்னார்
உடைத்து.
--- ௬௬௭
உருண்டோடும் பெரிய தேருக்கு உதவியாக இருப்பது சிறிய அச்சாணியே. அதுபோலச் செயல்திறன் மிக்கோர் பலர் உளர். ஒருவரின் உருவத்தைக்கொண்டு யாரையும் இகழ்ந்து விடக்கூடாது.
“
இகழ்தலின் கோறல் இனிதே மற்று இல்ல
புகழ்தலின் வைதலே நன்று.”
–நாலடியார்.
ஒருவரை வெறுத்து, அவர் மனம் புண்படி வசை மொழிகளைக் கூறுவதைவிட, அவரைக் கொன்றுவிடுவது
நன்றாம் ; ஒருவரிடத்தில் இல்லாத குணங்களை இருப்பதாகச் சொல்லிப் புகழ்வதைவிட, அவரை நேரடியாக
வைதலே நன்றாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக