திருக்குறள்
– சிறப்புரை : 687
கடனறிந்து காலம்
கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான்
தலை.—௬௮௭
ஆற்றவேண்டிய கடமை அறிந்து ; செயல்படுத்த வேண்டிய காலம் அறிந்து ; தக்க
இடத்தையும் தேர்ந்து ; சொல்லவந்த செய்தியைத் தொகுத்தும் வகுத்தும் தெளிவாக உரைக்க வல்லவனே
சிறந்த தூதனாவான்.
“இன்சொல்லான்
ஆகும் கிளைமை இயல்பு இல்லா
வன்சொல்லான்
ஆகும் பகைமை….” ---சிறுபஞ்சமூலம்.
இனிய சொற்களால் உறவு உண்டாகும் ; கடும் சொற்களால் பகை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக