திருக்குறள்
– சிறப்புரை : 674
வினைபகை என்றஇரண்டின்
எச்சம் நினையுங்கால்
தீஎச்சம் போலத்
தெறும்.--- ௬௭௪
செய்து முடிக்க வேண்டிய செயல், ஒழிக்க வேண்டிய பகை இவ்விரண்டையும் முழுதும்
நிறைவேற்றாமல் மிச்சம் வைப்பது ; தீயை முழுதும் அணைக்காமல் எஞ்சிய சிறு தீயானது வளர்ந்து
அழிப்பதைப் போல, வளர்ந்து கெடுக்கும்.
“
நன்றி விளைவும் தீதொடு வரும் ..” –நற்றிணை.
நன்மை கருதிச் செய்யும் செயல், தீமையாய் முடிவதும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக