திருக்குறள்
– சிறப்புரை : 690
இறுதி பயப்பினும்
எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம்
தூது.--- ௬௯0
உயிருக்கு இறுதி பயக்கும் நிலை ஏற்படினும் பகையரசரின் அச்சுறுத்தலுக்கு
அஞ்சாது தன் மன்னன் கூறிய செய்திகளை முழுமையாக எடுத்துரைக்கும் உள்ள உறுதி கொண்டவனே
சிறந்த தூதனாவான்.
“நனி
அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி
அஞ்சார் செய்வதுஉணர்வார்.” –பழமொழி.
செய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எது வந்தாலும்
அஞ்சார்.
அன்புடையீர்
கண்
நலம் காக்க 21 நாட்கள் ஓய்வில் … மீண்டும் சந்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக