செவ்வாய், 17 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 683

திருக்குறள் – சிறப்புரை : 683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. --- ௬௮௩
வேல்படை வலிமையுடைய அரசனிடத்துத் தன் மன்னனுக்கு வெற்றியைத்தரும் படைவலிமையை எடுத்துரைக்க வல்ல தூதனின் பண்பாவது கற்றறிந்தார் எல்லாருள்ளும் தான் சிறந்து விளங்குதலாம்.
“கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர்….” ---திருமுருகாற்றுப்படை.

சான்றோர். கற்றோரால் சிறிதும் அறியப்படாத பேரறிவினை உடையவர்கள் ; கற்றறிந்தவர்களுக்குத் தாமே எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக