திருக்குறள்
– சிறப்புரை : 670
எனைத்திட்பம்
எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை
வேண்டாது உலகு. – ௬௭0
எந்தவகையான செயல்திறன் பெற்றவராயிருந்தாலும் செய்து முடிக்கும் திறனாகிய
மனவலிமை இல்லாதவரை இவ்வுலகம் ஏற்றுப் போற்றாது.
“
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை
உடைத்துஇவ் வுலகு.” –குறள். 578.
தத்தம் கடமையாகிய தொழில் கெடாமல்,
கருணை உடையவராக இருக்க வல்லவருக்கு, உரிமை உடையது இவ்வுலகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக