செவ்வாய், 3 அக்டோபர், 2017

காதல் சிறப்புரைத்தல்

காதல் சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.                              குறள்.1121

இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . பாவாணர்

CHAPTER – 113
ON LOVE’S EXCELLENCE
The nectarine fluid in which are steeped the milk-white teeth, of my lady of gentle speech,
Is like the delicious mixture of milk and honey. (Tr.) Dr. S.M. Diaz.

The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow. (Tr.)  Dr. G.U. Pope

Love emotions- affection sweet fluid that is secreted in the fair maiden’s mouth. It has been proved  by the scientists water taste sweeter, when love aggravates  in  men and women.                                                 
           
காதல் வயப்பட்டோர் உணர்வின் வழிஅவர்தம் வாயில் சுரக்கும் உமிழ் நீர்  இனிமை உடையதாய் இருக்கும்.எனவே தண்ணீரும் சுவை மிகுந்து தோன்றும்; தண்ணீருக்கென்று சுவை ஏதும் இல்லை என்பது அறிவியல்அருவி நீர் இனிமை உடையது என்பதும்மான் உண்டு எஞ்சிய கலங்கிய நீர் தேன்கலந்த பாலினும் மிக்க இனிதாயிற்று என்பதும் காதல் வயப்பட்ட நிலையை உணர்த்தும்.


பூவொடு வளர்தலுற்ற முற்றாத இளங்காயினது, நீரைக் காட்டினும் இனிமையுடையனவாகி,- கூரிய பற்களிடத்தே அமிழ்தம் ஊறும் சிவந்த வாயினையும், - ஒளி பொருந்திய வளையினையும் உடைய, இளையளாய தலைவியை நாம் உடன் கொண்டு செல்லின்,அகநா. 335.



களவே சிறந்தது என்க
(கற்பில் -  புணர்ச்சி இன்பம் எனினும் களவுப் புணர்ச்சி இன்பம் போல இயல்பாக உளதாகாது ஊடுதலானே உண்டாவதாம்.)
அதனால்
அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக் கொண்டு துனிக்கும் தவறு இலர் இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார் இக் குன்றுப் பயன்.
குன்றம்பூதனார். பரிபா. 9 : 22  – 26

 கற்பொழுக்கத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது போல – பிரிவினை அறியாத களவுப் புணர்ச்சியையுடைய மகளிர் – தம் தலைவரோடு கருத்து மாறுபாடு கொண்டு ஊடல் கொள்ளும் குற்றம் உடையவர் அல்லர் – இக்களவுப் புணர்ச்சியே களவு, கற்பு என்னும் இரண்டு ஒழுக்கத்துள்ளும் சிறந்தது என்று பாராட்டுகின்ற பொருள் இலக்கணத்தை உடைய குளிர்ந்த இனிய தமிழை ஆராயாத தலைவரே – குறிஞ்சியில் நிகழும் இன்பமாகிய இக்களவு ஒழுக்கத்தினை மேற்கொள்ளார் .
 ( அகறல் – பிரிந்து போதல் ;  “அகலறியா அணியிழை நல்லார் “ என்றது. களவுப் புணர்ச்சியை உடைய தலைவியரைப் பிரிதலும் ஊடலும் இல்லாமையால் கற்பினும் களவே சிறந்தது என்பது கருத்து.
 “  சிறப்பினாற் பெயர் பெற்றது களவியலென்பது ……என்னை ? களவு கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவினைச் சிறப்புடைத்தென்று வேண்டும் இவ்வாசிரியன் “ – இறையனார் களவியல் சூ -1. உரை. – என்றும் இன்றமிழ் இயற்கை இன்பம் – சீவக சிந். 2043 – என்றும் பிற சான்றோரும் ஓதுமாற்றானும் உணர்க. – குன்றுப் பயன் – குன்றுதரும் பயன் – அஃதாவது களவுப் புணர்ச்சி இன்பம் – மலையும் மலை சார்ந்த நிலனுமாகிய குறிஞ்சி நிலத்து ஒழுக்க மாதலின் குன்று தரும் பயன் என்றார். இனி அக்களவுப் புணர்ச்சியை உடைமையால் வள்ளி சிறந்தவாறும் அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார். )

CHAPTER – 113
ON LOVE’S EXCELLENCE
The nectarine fluid in which are steeped the milk-white teeth, of my lady of gentle speech,
Is like the delicious mixture of milk and honey. (Tr.) Dr. S.M. Diaz. (1121)

The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow. (Tr.)  Dr. G.U. Pope (1121)

Love emotions- affection sweet fluid that is secreted in the fair maiden’s mouth. It has been proved  by the scientists water taste sweeter, when love aggravates  in  men and women.                                                 
           
காதல் இனிக்கும்
Love makes water taste sweet
New York: Love really is sweet. Both candy and water taste sweeter when people think about love, a new study has found…………………..  We always say ‘ love is sweet. We thought let’s see whether this applies to love “said researcher  Kai Qin Chan, at Radbound University Nijimegen in the Netherlands. Chan and colleagues conducted three experiments on 197 students at the National University of Singapore…………………………. Love made the water taste sweeter ….
                                                                           – TOI, 27-01- 14

காதல் வயப்பட்டோர் உணர்வின் வழிஅவர்தம் வாயில் சுரக்கும் உமிழ் நீர்  இனிமை உடையதாய் இருக்கும்.எனவே தண்ணீரும் சுவை மிகுந்து தோன்றும்; தண்ணீருக்கென்று சுவை ஏதும் இல்லை என்பது அறிவியல்அருவி நீர் இனிமை உடையது என்பதும்மான் உண்டு எஞ்சிய கலங்கிய நீர் தேன்கலந்த பாலினும் மிக்க இனிதாயிற்று என்பதும் காதல் வயப்பட்ட நிலையை உணர்த்தும். 
Editorial
Love is Sweet
“ A couplet from Thirukkural (1121) says that the salvia that secretes from the mouth of a lady – love is alike a combination of milk and honey, especially  when he enjoys  her in clandestine love.
 This is the statement of an energetic young man when he felt infatuated in  warmly embracing and closely  kissing his darling in a secret love-affair. Stolen kiss is sweeter, says Shakespeare.
 Salvia or a fluid from the mouth of his lady-love is said to be sweet may seem to be an exaggeration at the surface level.

  But a researcher Kai chan of  Radbound  University has conducted three experiments on the 197 students of National University of Singapore and received the report that love made the water taste sweeter.”  Vide – Times of India, 27/01/2014 –Editor.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக