ஞாயிறு, 22 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 688

திருக்குறள் – சிறப்புரை : 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. ௬௮௮
 மனத்தூய்மை உடையவனாதல் ; அமைச்சர் முதலிய கற்றறிந்தார் துணையைப் பற்றி நிற்றல் ; எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் துணிவு  உடையவனாதல் ஆகிய இம்மூன்றும் நிறைவாகக் கொண்டு  தன் அரசர் ஆராய்ந்து கூறியவழி வாய்மைதவறாது அஃதாவது சொற்குற்றம் வாராது தூதுரைத்தல் தூது செல்வானுக்குரிய பண்புகளாம்.
“ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் …” –நற்றிணை.

ஆன்றோர் போற்றிய நெறிகளைத் தவறாது பின்பற்றும் சான்றோன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக