திங்கள், 16 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 682

திருக்குறள் – சிறப்புரை : 682
அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. --- ௬௮௨
அன்புடைமை அறிவுடைமை ஆராய்ந்தறிந்த செய்திகளை மனங்கொள எடுத்துரைக்கும் சொல்வன்மை ஆகிய இம்மூன்றும்  தூது உரைப்பானுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகளாம்.
“மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை…” --நான்மணிக்கடிகை.
தந்தையின் இயல்புகளை மகனின் நடத்தை வெளிப்படுத்தும்; மனத்தில் உள்ள எண்ணங்களை முகமே வெளிப்படுத்தும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக