புதன், 11 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 677

திருக்குறள் – சிறப்புரை : 677
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.--- ௬௭௭
 ஒரு செயலைச் செய்ய வேண்டிய வழிமுறையாவது, ஏற்கெனவே அச்செயலைச் செய்தவனுடைய பட்டறிவைக் கேட்டறிந்து, அதன்படி நடந்து கொள்ளவேண்டும்,
”உயர்குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.” –நாலடியார்.

தன் பெயரைக் கல்லில் எழுதக்கூடிய வகையில் சிறந்த செயல்களைச் செய்து புகழ் பெற மாட்டாதவன், உயர்ந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன்..? ஒரு பயனும் இல்லை என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக