வியாழன், 5 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 671

68.வினை செயல் வகை
திருக்குறள் – சிறப்புரை : 671
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
சூழ்ச்சியுள் தங்குதல் தீது. ---- ௬௭௧
செய்வினை முடிக்கும் திறனை ஆராய்ந்து, செயலாற்றத் துணிய வேண்டும் ; அவ்வாறு துணிந்தபின் காலம் கடத்துவது குற்றமாகும்.
”விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.” ---சிறுபஞ்சமூலம்.

பாத்தியிட்டு விதைக்காமலே முளைக்கிற விதை போலப் பிறர் அறிவுறுத்தாமலே அறிவுடையார்க்கு அறிவு தோன்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக