திருக்குறள்
– சிறப்புரை : 673
“ஒல்லும்வா
யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய்
நோக்கிச் செயல்.
--- ௬௭௩
ஒரு செயலைச் செய்து முடிக்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடனே செய்து முடிப்பது நன்று. அப்படிச் செய்ய முடியவில்லை
என்றால் ஏற்ற வாய்ப்பு நோக்கிச் செய்யத் துணிய
வேண்டும்.
“
அறிவது அறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகு உவப்பச் செய்து – பெறுவதனால்
இன்புற்று
வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
–நாலடியார்.
அறிய வேண்டியவற்றை அறிந்து, பொறுமையுடன் இருந்து, அஞ்சத்தக்க பழி பாவங்களுக்கு
அஞ்சி, செய்ய வேண்டிய செயலை உலகம் உவக்கும்படிசெய்து, பெற்ற பொருளால் மனம் மகிழ்ந்து
வாழும் இயல்புடையார்க்கு எப்பொழுதும் துன்பமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக