ஞாயிறு, 15 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 681

 69. தூது
திருக்குறள் – சிறப்புரை : 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.--- ௬௮௧
வேந்தர்களுக்கிடையே செய்தி பரிமாறும் மிகப்பெரிய பொறுப்பைச் சுமந்து செல்பவன் ; எந்நிலையிலும் தன்னிலை தாழாமல் கடமையாற்ற வல்லவனாக விளங்க வேண்டியவன் தூதுரைப்பவனே. தூதுவனுக்கு உரிய  தகுதிகளாகத் திருவள்ளுவர் வரையறுத்துக் கூறுவன:-
யாவரிடத்தும் அன்புடையவனாகவும் ; உயர் குடியில் பிறந்தவனாகவும் அரசனால் விரும்பிப் போற்றப்படும் நற்குணங்களைக் கொண்டவனாகவும் இருத்தல் வேண்டும்.
“தான்கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க….” –நாலடியார்.
தான் கெட்டுப்போனாலும் பெரியோர்க்குக் கேடு செய்ய நினைக்காதே; உடம்பே இளைத்து ஒழிந்தாலும் உண்ணத்தகாத பகைவர் கையிலே உள்ள உணவைப்பெற்று உயிர் வாழாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக