செவ்வாய், 3 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 669

திருக்குறள் – சிறப்புரை : 669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. --- ௬௬௯
செய்யத் துணிந்த செயலில் துன்பம் நேரிடினும் கலங்காது துணிவுடன் செயலாற்றி இன்புறுதல் வேண்டும்
“ ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி
   ஊக்கம் உரையார் உணர்வு உடையார் …” –நாலடியார்.
ஒரு செயலைச் செய்து முடிக்கும் அளவும் தமது அறிவின் திறத்தை வெளிப்படுத்தாது உள்ளத்தில் அடக்கி, தமது  மன வலிமையைச் சொல்ல மாட்டார் செயல் திறன் மிக்க ஊக்கமுடையார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக