அண்புடையீர்
ஓய்வு
– தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருக்குறள்
– சிறப்புரை : 691
70.மன்னரைச்
சேர்ந்தொழுகல்
அகலாது அணுகாது
தீய்க்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச்
சேர்ந்தொழுகு வார்.---
௬௯௧
வெகுளும் இயல்புடைய வேந்தரைச் சார்ந்திருப்போர் தீயில் குளிர் காய்வாரைப்
போல மிக நெருங்காமலும் மிக விலகாமலும் ஒழுகுதல் வேண்டும்.
“நல்லார்
எனத் தாம் விரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.”’
–நாலடியார்.
நல்லவர் என்று கருதி நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர் நல்லவர் அல்லர்
எனக் கண்டபோதிலும் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவரை நண்பராகவே வைத்துக்கொள்ள
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக