திங்கள், 2 அக்டோபர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 668

திருக்குறள் – சிறப்புரை : 668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். --- ௬௬௮
மனக் கலக்கமின்றிச் செய்யத் துணிந்த செயலைச் சோர்வு கொள்ளாமலும் காலம் கடத்தாமலும் செய்து முடிக்க வேண்டும்.
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். –குறள்.483.

செய்யு வேண்டிய செயலைச் செய்து முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்ற காலத்தையும்  அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உளவோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக