திருக்குறள்
– சிறப்புரை : 680
உறைசிறியார்
உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வார் பெரியார்ப்
பணிந்து.
--- ௬௮0
தாம் ஆளும் நிலம் சிறிதாக உடையவர் (குறுநிலமன்னன்) பகைவரால் தம் மக்கள்
நடுங்குதற்கு அஞ்சி ; பெருநில மன்னனோடு இணங்கிச்செல்லவே முற்பட்டு அம்மன்னனைப் பணிந்து ஏற்றுக்கொள்வர்.
”பற்றா
மக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும்
கலாமும் செய்யாது அகலுமின்.” –ஆசாரக்கோவை.
பகைவரே ஆயினும் அவர்களுடன் பகையும் கலகமும் கொள்ளாது விலகுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக