திருக்குறள் -சிறப்புரை :803
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. --- ௮0௩
(நட்பு எவன்)
நண்பர்கள் உரிமையோடு செய்தவற்றைத் தாமே செய்ததாகக் கருதி ஏற்றுக்கொள்ளவில்லை
என்றால், பழகிய நட்பு என்ன பயனைத் தரும் ?
“ நல்லார் எனத் தாம் விரும்பிக்
கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.”—நாலடியார்.
நல்லவர் என்று கருதி, நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட
ஒருவர், நல்லவர் அல்லர் எனக் கண்ட போதிலும் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவரை, நண்பராகவே வைத்துக்கொள்ள வேண்டும்.