ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 42: 11. காதல் இனிக்கும்

11. காதல் இனிக்கும்


 காதல் சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.                              -குறள்.1121

இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . பாவாணர்

CHAPTER – 113
ON LOVE’S EXCELLENCE
The nectarine fluid in which are steeped the milk-white teeth, of my lady of gentle speech,
Is like the delicious mixture of milk and honey. (Tr.) Dr. S.M. Diaz.

The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow. (Tr.)  Dr. G.U. Pope

Love emotions- affection sweet fluid that is secreted in the fair maiden’s mouth. It has been proved  by the scientists water taste sweeter, when love aggravates  in  men and women.                                               
         
 பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ஆகி கூரெயிற்று
அமிழ்தம் ஊறும் செவ்வாய்
ஒண் தொடி குறுமகள் கொண்டனம் செலினே.
    --மதுரைத் தத்தங்கண்ணனார். அகநா. 335: 23--26

                        பூவொடு வளர்தலுற்ற முற்றாத இளங்காயினது, நீரைக் காட்டினும் இனிமையுடையனவாகி,- கூரிய பற்களிடத்தே அமிழ்தம் ஊறும் சிவந்த வாயினையும், - ஒளி பொருந்திய வளையினையும் உடைய, இளையளாய தலைவியை நாம் உடன் கொண்டு செல்லின்

களவே சிறந்தது என்க

கற்பில்புணர்ச்சி இன்பம் எனினும் களவுப் புணர்ச்சி இன்பம் போல இயல்பாக உளதாகாது ஊடுதலானே உண்டாவதாம்.
அதனால்

அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக் கொண்டு துனிக்கும் தவறு இலர் இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார் இக் குன்றுப் பயன்.
குன்றம்பூதனார். பரிபா. 9 : 22  – 26

                           கற்பொழுக்கத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது 

போலபிரிவினை அறியாத களவுப் புணர்ச்சியையுடைய மகளிர்தம் தலைவரோடு கருத்து மாறுபாடு கொண்டு ஊடல் கொள்ளும் குற்றம் உடையவர் அல்லர்இக்களவுப் புணர்ச்சியே களவு, கற்பு என்னும் இரண்டு ஒழுக்கத்துள்ளும் சிறந்தது என்று பாராட்டுகின்ற பொருள் இலக்கணத்தை உடைய குளிர்ந்த இனிய தமிழை ஆராயாத தலைவரேகுறிஞ்சியில் நிகழும் இன்பமாகிய இக்களவு ஒழுக்கத்தினை மேற்கொள்ளார் .

                    அகறல்பிரிந்து போதல் ;  “அகலறியா அணியிழை நல்லார்என்றது. களவுப் புணர்ச்சியை உடைய தலைவியரைப் பிரிதலும் ஊடலும் இல்லாமையால் கற்பினும் களவே சிறந்தது என்பது கருத்து.

                         “  சிறப்பினாற் பெயர் பெற்றது களவியலென்பது ……என்னை ? களவு கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவினைச் சிறப்புடைத்தென்று வேண்டும் இவ்வாசிரியன் “ – இறையனார் களவியல் சூ -1. உரை. – என்றும் இன்றமிழ் இயற்கை இன்பம்சீவக சிந். 2043 – என்றும் பிற சான்றோரும் ஓதுமாற்றானும் உணர்க. – குன்றுப் பயன்குன்றுதரும் பயன்அஃதாவது களவுப் புணர்ச்சி இன்பம்மலையும் மலை சார்ந்த நிலனுமாகிய குறிஞ்சி நிலத்து ஒழுக்க மாதலின் குன்று தரும் பயன் என்றார். இனி அக்களவுப் புணர்ச்சியை உடைமையால் வள்ளி சிறந்தவாறும் அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறுகின்றார். ---தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக