சனி, 31 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 68 : 23.முல்லை

தொல்தமிழர் அறிவியல் – 68 : 23.முல்லை

23.முல்லை

முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவுஇன் ஊரே.
                                 --இடைக்காடனார், அகநா. 274 : 13, 14
               
நறுமணம்  மிக்க முல்லை மலர் ஒத்த, கற்பில் சிறந்த, மென்மைத்தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர் இதுவே. – தலைவன்.

குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த
 முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
                     -இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், சிறுபாண்.  29 – 31

             கஞ்சங்குல்லையையுடைய அழகிய காட்டகத்தே குவிந்த அரும்பு எயிறு (பல்) என்னும்படி  நெகிழ்ந்த முல்லை சூடுதற்கு அமைந்த கற்பு ; மென்மையான இயல்பு ; மடப்பத்தினை உடைய மான் போலும் பார்வை ;  ஒளி பொருந்திய நுதல் என அழகு மிக்க, விறல்பட ஆடும் மகளிர்.

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே.
                            -குடவாயிற் கீரத்தனார், புறநா.242 .
              இளைய வீரர் சூடார் ; வளையணிந்த இளைய மகளிர் பறியார் ; நல்ல யாழ்க்கோட்டின் மெல்ல வளைத்துப் பாணன் பறித்துச் சூடிக் கொள்ளான் ; பாடினி சூடாள்தன்னுடைய ஆண்மைப்பாடு யாவர்க்கும் வெளிப்பட வீரரை எதிர்நின்று  கொன்று வென்ற வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்டபின்பு முல்லையாய நீயும் பூக்கக்கடவையோ, அவனது ஒல்லையூர் நாட்டின்கண்..!
முல்லைப் பூ - மருத்துவம்

முல்லைப் பூ தலையில் சூட ட்டும் ல்லாமல் ல்வேறு
மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.
அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன்
மணத்தை முகர்ந்தாலே மனோவியாதிகள்நீங்கி மனத்தெளிவு ண்டாகும் ன்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவி‌‌ன் சாறுபிழிந்து3 துளி மூக்கில்விட தலைவலிதீரும்.
முல்லைப் பூ‌‌வின் சாற்றினை 2 ல்லது 4 துளிவீதம்
ண்ணில்விட்டு வரக் ண் பார்வைக் குறைவு குணமாகும்
முல்லைப் பூவை அரைத்து ல்லது ப்படியே வைத்து
 மார்பில் ட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.
ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவைநீர்விட்டுக் காய்ச்சி
 பாதியாகற்றியதும் 15 ‌மில்லி அளவு குடி‌‌த்து வர
மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.        ----தமிழ் வேங்கை, வலைப்பூ.

அறிவியல் நோக்கு
                           The language of flowers, sometimes called floriography, is a means of cryptological communication through the use or arrangement of flowers. Meaning has been attributed to flowers for thousands of years, and some form of floriography has been practiced in traditional cultures throughout Europe, Asia, and the Middle East. Plants and flowers are used as symbols in the Hebrew Bible, particularly of love and lovers in the Song of Songs,[1] as an emblem for the Israelite people[2] and for the coming Messiah.[3] In Western Culture, William Shakespeare  ascribed emblematic meanings to flowers, especially in Hamlet, Prince of Denmark.
---விக்கிபீடியா……தொடரும்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக