வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 47 : 14. வயவு நோய்

தொல்தமிழர் அறிவியல் – 47 : 14. வயவு நோய்

14. வயவு நோய்


திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப்
பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு
வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவ ருண்ணா வரு மண்ணினையே
                                   --குறுங்கோழியூர் கிழார், புறநா. 20 : 12 – 15

                              போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரருடனே பகைவர் 
மாய, அம்மாற்றாருடைய மண்ணைக்கொண்டு உண்ணுந் தலைவ ! நின்னுடைய நாட்டின்கண் வேட்கை நோயுற்ற பெண்டிர் விரும்பி உண்ணினல்லது பகைவர் உண்ணப்படாத பெறுதற்கரிய மண்ணையுடையை….

                            கருப்பமுற்ற மகளிர்க்கு நுகரப்படும் பொருள்மேற் செல்லும் வேட்கை, அதனால் அவர்கள் புகையுண்ட மண்ணையுண்பர், ‘ மனை புகையுண்ட  கருமண்ணிடந்து, பவள வாயிற் சுவை காணாது
  ---கல்லாடம், 7. .வே.சா. உரை.          

                                 கருவுற்ற மகளிர் சுடுமண் தின்னும் வழக்கம் அண்மைக் காலம் வரை வழக்கில் இருந்துள்ளது. செங்கல் துண்டுகளை அடுப்பில் இட்டு உண்ணலும் ,   வயல்களிலும் குளங்களிலும் எடுத்துவந்த பொறுக்குமண்ணை  (காய்ந்த சேற்றோடு) அடுப்பில் இட்டு நறுமணத்தோடு கூடிய  அம்மண்ணை உண்ணும் வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது. கருவுற்றமகளிர் பல்துலக்கும் போது அடுப்புச் சாம்பலையும், விறகு எரித்த கரித்துண்டையும் பொடித்து உண்ணுதலும் உண்டு.
பழந்தமிழ்ப்புலவர் பதிவு செய்துள்ள இக்கருத்தை  அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர். கருமண் உண்ணல் கருவுற்ற மகளிர்க்கும் குழந்தைக்கும் ஊட்டச்சத்தாக அமைகிறது என்பதைக் கீழ்க்காணும் ஆய்வுரையால் அறியலாம்.

அறிவியல் நோக்கு

Eating soil, Effects of eating soil during pregnancy

                               Eating soil is also known as geophagy which is the terminology used  for the act.  This habit is due to lack of irons in the body and this is commonly seen among pregnant women.  It is mainly the urge and craving that makes many of them  to long for soil. Although the practices differ from country to country, It has however been noticed as a common trait among pregnant women.  In America in the rural south, you will see that the habit of eating soil is mainly among the black women. Formerly this habit was in Sub-Saharan Africa.  Nutritionists say  that eating soil actually has some health benefits attached to it. The binding effect of clay can cause it to absorb toxins according to expert nutritionists. The soils may act as mineral supplements for the pregnant women. This is because the need and uptake for minerals greatly increases during pregnancy. The mineral content in clay soils varies from one region to another and it may contain the following minerals, calcium, iron, magnesium and copper that are essential for the human diet. Eating soil is not harmful unless it has been got from a dangerous place. Take an example of soil that has been contaminated by human waste or any kind of industrial chemicals. 
·         Pregnant women often eat soil as it soothes the morning sickness and needed for baby development.
·          It also protects the stomach from any parasites within the gut for expectant women. It supplies iron also.
---ABOUTUGANDA.COM--------தொடரும்……..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக