வியாழன், 15 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 53 : 16. நிறம் மாறும் பூக்கள்

தொல்தமிழர் அறிவியல் – 53 :  16. நிறம் மாறும் பூக்கள்

16. நிறம் மாறும் பூக்கள்


                          “ செடிகள் மற்றும் மரங்களில் இலைகள் தளிராக இருப்பதிலிருந்து பழுத்து உதிரும் வரை பல்வேறு நிறங்களைப் பெற்றுள்ளன. இந்த நிறமாற்றத்தைப் பூக்களிலும் நாம் காணலாம்.புரூன்பெஸ்சியா தாவரங்களில் இது போன்ற நிறம் மாறும் பூக்களைக் காணலாம். இதில்  பல்வேறு வகைகள் உள்ளனகாலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் நிறத்தை மாற்றிக் கொள்ளும் இயல்பைப் பெற்றுள்ளன.”

நிறம் மாறும் பூ

 வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
 நரை நிறம் படுத்த நல் இணர்த்  தெறுழ் வீ
                              மதுரை மருதனிள நாகனார். நற். 302 : 4 -5

 பெரிதாகப் பெய்கின்ற மழையை நோக்கிப் பூத்திருக்கின்ற எறுழ மலர்கள் நீலமணி போன்ற நிறம் கொண்டவை. அடர்ந்த புதர்களில் உள்ள நல்ல பூங்கொத்துக்களை உடைய இவை மழைக்காலம் நீங்கியதால் தம் இயல்பான நீல நிறத்தினின்று மாறி வெண்மை நிறமாக மாறியிருக்கின்றன. (தெறுழ்வீஒரு காட்டுக் கொடிவகை . )      ( எறுழ மலர்- செந்நிறப்பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை….?)

பிசாசு செடி

இந்தச் செடியின் தண்டுப்பகுதி மெழுகு போன்று இருக்கும், தண்டுப் பகுதியைச் செடியிலிருந்து பிடுங்கிய பிறகு வெள்ளை நிறத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாறிவிடும் ஆதலால் இதனைப்பிசாசு செடிஎன்றும் அழைக்கின்றனர். பச்சோந்தி இடத்திற்குத் தகுந்தபடி தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்வது போல இந்தச்செடியின் தண்டும் செடியில் இருக்கும்போது ஒரு நிறமாகவும் செடியைவிட்டுப் பிரிந்த பிறகு மற்றொரு நிறமாகவும் மாறிவிடும் இயல்பைப் பெற்றுள்ளது.  -- தினத் தந்தி , 5/8/17.
            
கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன.
                                                               -
கார்நாற்பது, 25.


குளிர்ச்சி மிக்க காட்டில், கரிய தாளினையுடைய வரகினது பொரியைப் போல, தெறுழினது மலர்கள், அரும்பு அவிழ்ந்து மலர்ந்தன
ஈர்ந்தண்: ஒரு பொரு ளிருசொல், தெறுழ்-காட்டகத்ததொரு கொடி.

அறிவியல் நோக்கு


                   The Boraginaceae, the borage or forget-me-not family, includes a variety of shrubs, trees, and herbs, totaling about 2,000 species in 146 genera found worldwide.-------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக