சனி, 24 ஆகஸ்ட், 2019

தொல்தமிழர் அறிவியல் – 62: 21. காட்டுத் தீ

தொல்தமிழர் அறிவியல் – 62: 21. காட்டுத் தீ 

21. காட்டுத் தீஉராய்வு

மூங்கில்
     “ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர்
கலிகொள் மள்ளர் வில்விசையின் உடையப்
பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் ........
     பாலை பாடிய பெருங்கடுங்கோ, அகநா. 185:6-9
              
                    வாடுதலையும் ஒலித்தலையும் உடைய தண்டினையும் மேல் நோக்கி எழுந்த நெற்கதிர்களையும் உடைய நீண்ட மூங்கிலானது, ஆரவாரம் மிக்க வீரர்கள் வளைத்துவிட்ட வில் ஒலியுடன் தெறிக்குமாறு போல வெப்பத்தைப் பொறுக்கமாட்டாது ஒலியுடன் வெடித்துத் தெறிக்கும்.
மூங்கில்முத்து
............................நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்கு உறழ் தோன்றல பழங்குழித் தாஅம்
                                     முள்ளிப்பூதியார், அகநா.173 :13-15
              காட்டில் வெப்பம் நீரை உறிஞ்சியதால் வற்றிய அழகிய பெரிய நீண்ட மூங்கிலின் கணுக்கள் வெடிக்க, கழங்கினைப் போன்ற உருவினைக் கொண்ட கழுவப்படாத முத்துக்கள் வழிச் செல்வார் கழங்காடிய பழைய குழிகளிலே வந்து வீழும். கழங்கு = கழற்சிக் காய்.

காட்டுத்தீ
தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
உறுவளி ஒலிகழைக் கண் உறுபு தீண்டலின்
பொறிபிதிர்பு எடுத்த பொங்கு எழு கூரெரிப்
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆரிடை
நல்லடிக்கு அமைந்த அல்ல......
        சேரமான் இளங்குட்டுவன்,அகநா.153:8-12
              சுடும் கதிரவன் வெம்மை – வீசும் பெருங்காற்று – மூங்கிலின் கணுக்களைப் பொருந்தித் தாக்கும் – சிதறி வீழும் தீப் பொறி – பெரு நெருப்பாகும்  - தலைவி நடந்து செல்ல ஆற்றுவாளோ.
உராய்வு
Friction
                           Fire can be created through friction by rapidly grinding pieces of solid burnable material (such as wood) against each other or a hard surface. Successfully creating fire by friction involves skill, fitness, knowledge, and acceptable environmental conditions. Some techniques involve crafting a system of interlocking pieces that give the practitioner an improved mechanical advantage; these techniques require more skill and knowledge but less fitness, and work in less ideal conditions.
                     Producing a fire by friction is not comparable to lighting a match, in which case the fire lighting tool has already created a flame for you. With friction fire effort is focused into grinding dust off of soft solid burnable material such that the dust is smoldering.
                              The hand drill is suggested[by whom?] to be the oldest method of fire by friction, characterized by the use of a thin, straightened wooden shaft or reed to be spun with the hands, grinding within a notch against the soft wooden base of a fire board (a wooden board with a carved notch in which to catch heated wood fibers created by friction.—Wikipedia.
                    செயற்கையாகத் தீயை உண்டாக்க மனிதனுக்கு உந்து சக்கதியாக அமைந்தது இயற்கையேமலைப் பகுதிகளில் தழைத்து வளர்ந்து ஓங்கி உயர்ந்து முற்றிய மூங்கில் மரங்கள் காற்றினால் ஒன்றோடொன்று பலமுறை உராய்வதால்  சூடாகி வெடித்துச் சிதறுவதால் தீப் பொறிகள் வீழ்ந்து காடு தீப் பற்றி எரிவதைக் கண்ட மனிதன் தீக்கடை கோலைக் கண்டுபிடித்து வேண்டும் போது வேண்டிய இடத்தில் நெருப்பை உண்டாக்கினான்------தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக