கலித்தொகை – அரிய
செய்தி – 2 -3
பிரிவுத் துயர்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேயத்து முயன்று
செய் பொருளே.
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 7 : 20 - 21
தலைவ ! நீ பொருள் ஈட்ட
முயன்று ; கருதிச் செல்லும் தேயத்து நீ ஈட்டும்
பொருள் இன்பம் தருமேயன்றி ; இழந்த இவள் இனிய உயிரை மீட்டுத் தருமோ? ( நின் பிரிவால்
தலைவி இறந்துவடுவாள் என்றாள் தோழி)
கலித்தொகை – அரிய செய்தி – 3
காதல் – அறம்
இறந்த கற்பினாட்கு எவ்வம்
படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச்
சென்றனள்
அறம் தலைப் பிரியா ஆறும் மற்ற துவே.
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 9 :
21 – 24
தலைவனும் தலைவியும் உடன்போக்கில்
சென்றனர் – செவிலி தேடிச் சென்றாள் – வழியில் எதிரே வந்த அறவோரைகண்டு வினவியதற்கு – அறவோர் “ மிக உயர்ந்த
கற்புடைய நும் மகள்; சிறந்த கணவனை வழிபட்டு அவன் பின்னே சென்றாள் ‘; வருந்தாதீர்
- இல்லறமே அறங்களில் தலயாய அறம் ; அவ்வற வழியே
அவர்கள் சென்றதனால் நலமுடன் வாழ்வர். ” என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக