Francis Whyte Ellis
தமிழ்நாடு அரசு
தொல்பொருள் ஆய்வுத்துறை அண்மையில் சென்னை மாநகர் இராயப்பேட்டையில் ஒரு கிணற்றுக் கல்வெட்டைக்
கண்டுபிடித்தது. இக்கல்வெட்டு மிகவும் வரலாற்றுச் சிறப்புடையது. வள்ளுவப் பேராசானின்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எல்லிஸ்
என்ற பெருமகன் சென்னை மாநகரில் 1818 ஆம் ஆண்டில் 27 கிணறுகளை மக்களின் நன்மைக்காகத்
தோண்டி வைத்திருக்கிறார்.திருக்குறளின் வழியில்நின்று நீர்நிலைகளே நாட்டிற்கு இன்றியமையாத
அங்கம் என மனதில் கொண்டு இக்கிணறுகளைத் தோண்டி அவற்றிற்கு இந்துசமய மரபுப்படி புண்யாக
வாசனம் செய்துள்ளார். அதைப் பண்டைய கல்வெட்டுக்கள் போலவே அழகிய தமிழ்ச் செய்யுளில்
எழுதி கல்லில் வெட்டி வைத்துள்ளார். இதில் “இரு புனலும்” என்று தொடங்கும் குறளை அப்படியே
முழுமையும் எழுதி வைத்துள்ளார்.
திண்டுக்கல்லில் கல்லறையில் உள்ள கல்வெட்டு
அவருக்குக் குறளில் இருந்த ஈடுபாட்டையும் சென்னையில் கிணறு தோண்டியதையும் குறிக்கிறது.
அவர் தோண்டிய கிணறும் கல்வெட்டும் இப்பொழுதுதான் முதன்முதலில் தமிழ்நாடு அரசு தொல்பொருள்
ஆய்வுத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சென்னைக் கிணற்றுக் கல்வெட்டு
பாரெலா நிழற்று பரியரிக் குடையோன்
வாரியுஞ் சிறுக
வருபடைக் கடலோன்
ஆர்கடலதிர வார்த்திடுங்
கப்பலோன்
மரக்கல வாழ்வின்
மற்றொப் பிலாதோன்
தனிப் பெருங்
கடற்குத் தானே நாயகன்
தீவுகள் பலவுந்
திதி பெறப் புரப்போன்
தன்னடி நிழலிற்
றங்கு பல்லுயிர்க்குந்
தாயினு மினியன்
தந்தையிற் சிறந்தோன்
நய நெறி நீங்கா
நாட்டார் மொழி கேட்
டுயர் செங்கோலும்
வழாமை யுள்ளேன்
மெய்மறை யொழுக்கம்
வீடுறா தளிப்போன்
பிரிதன்னிய
சுகோத்திய விபானிய மென்னு
மும் முடி தரித்து
முடிவிலாத
திக்கனைத்துந்
தனிச் சக்கர நடாத்தி
யொரு வழிப்பட்ட
வொருமையாளன்
வீர சிங்காதனத்து
வீற்றிருந் தருளிய
சோர் சென்னு
மூன்றா மரசற்கு 57ம்(தமிழ் எண் இடுக ) ஆண்டில்
காலமுங் கருவியும்
கருமமுஞ் சூழ்ந்து
வென்றியொடு
பொருள் புகழ் மேன்மேற் பெற்ற
கும்பினியார்
கீழ்ப்பட்ட கனம் பொருந்திய
யூ.வெலயத் தென்பவ னாண்டவனாக
சேர சோழ பாண்டியாந்திரங்
கலிங்க துளுவ
கன்னாட கேரளம்
பணிக்கொடு துரைத்தனம்
பண்ணும் நாளில்
சயங்கொண்ட தொண்டிய
சாணு (ளு)று நாடெனும்
ஆழியி லிழைத்த
வழகுறு மாமணி
குணகடன் முதலாக
குடகடலளவு
நெடுநிலந் தாழ
நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத் தெல்லீசு
னென்பவன் யானே
பண்டார காரிய
பாரஞ் சுமைக்கையிற்
புலவர்கள் பெருமான்
மியிலையம் பதியான்
தெய்வப் புலமைத்
திருவள்ளுவனார்
திருக்குறடன்னிற்
றிருவுளம் பற்றிய
இரு புனலும்
வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற்
குறுப்பு
என்பதின் பொருளை
என்னுளாய்ந்து
-
-
ஸ்ரீ சாலிவாகன சகாப்த
௵ ௲௭௱௪௰ றாச் செல்லா நின்ற
இங்கிலிசு
௵ ௲அ௱௰அ ம் ஆண்டில்
பிரபவாதி
௵ க்கு மேற் செல்லா நின்ற
பஹுதான்ய ௵ த்தில் வார
திதி
நக்ஷத்திர
யோக கரணம் பார்த்து
சுப
திநத்தி லிதனோ டிருபத்தேழு
துரவு
கண்டு புண்யாஹவாசநம்
பண்ணுவித்தேன்.
1818
------------------ தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக