சனி, 10 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 6 -7

கலித்தொகை – அரிய செய்தி – 6 -7
உள்ளம் ஒன்றாதார் வாழ்க்கை
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
 ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை …..
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 18  :  10 – 11
  இல்லற வாழ்க்கையாவது – கணவனும் மனைவியும் வாழ்நாள் வரையும் ஒருவரை ஒருவர் தம்முள் தழுவியும் ஒவ்வொரு சமயம் ஒன்றன் கூறாடையை உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும் வருந்தாது – உள்ளம் ஒன்றிக்கலந்து பிரியாது இருப்பவர்களுடைய வாழ்க்கையே வாழ்க்கை !.
கலித்தொகை – அரிய செய்தி – 7
 வளியினும் வரைநில்லா வாழுநாள் …..
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 20  :  9

   காற்றின் திசை வேகத்தைக்கூட கணிக்கலாம் ஆயின் வாழ்நாளை வரையறுத்துக் கூறுதல் இயலாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக