கலித்தொகை – அரிய
செய்தி – 34 - 35
பெண்ணிற்கு அழகாவன
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய்போல
அகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி
நுதல் அடி நுசுப்பு என மூவழிச் சிறுகி
கவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு
சோழன் நல்லுருத்திரன்.
கலித்.108 : 1 - 4
ஏடீ ! அல்குல்- தோள்-
கண் என மூன்றிடமும் பெருத்து – நெற்றி- அடி -இடை என மூன்றிடமும் சிறுத்து – மன்மதனும்
தனக்குத் தொழில் இல்லை எனக் கவலையால் தன் படைக்கலன்களைக் கைவிடுதற்குக் காரணமான அழகோடு
வருபவளே ….
கலித்தொகை – அரிய
செய்தி – 35
இருமணம்
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே
சோழன் நல்லுருத்திரன்.
கலித்.114 : 19 – 21
விரிந்த திரை சூழ்ந்த கடலை ஆடையாக உடைய உலகத்தைப் பெற்றாலும் - அற நெறியில் செல்லும் ஆயமகளிர்க்கு இருமணம் என்பது குடிப்பிறப்பிற்கு இயல்பன்று.
( சிறந்த
குடியில் பிறந்த மகளிர் விரும்பியவனையன்றி வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளார் என்பதாம்.
) இப்பாடலில் – திருமணத்தின்போது வீட்டில் புதுமண் பரப்பி – செம்மண் பூசி அழகுபடுத்துதலும்
– பெண் எருமையின் கொம்பை வீட்டினுள் நட்டு வழிபட்டமையும் சுட்டப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக