திங்கள், 5 அக்டோபர், 2015

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 10

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 10
பிரிவறியா விலங்கினம்
 உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மைப்
பிரிந்துறல் அறியா விருந்து கவவி
நம்போல் நயவரப் புணர்ந்தன
கண்டிகும் மடவரல் புறவின் மாவே
பேயனார். ஐங். 419
  மடம் பொருந்தியவளே ! உயிரோடு உயிர் கலந்தாலொத்த குற்றமற்ற அன்பு பூண்ட இக்காட்டு விலங்குகள் – பிரிவு என்பதனை அறியாதிருந்து – புதுமையுற அணைத்து நம் போன்றே விருப்பத்தோடு புணர்ந்தன – காண்பாய். ( விலங்குகள் மாந்தர் போலன்றி யாண்டும் எப்பொழுதும் ஆணும் பெண்ணுமாய் இணைந்தே வாழும் இயல்பினவாதலின் இங்ஙனம் கூறினான் என்க. புணருந்தொரும் புதிய இன்பம்  - அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் – செறிதோறு சேயிழை மாட்டு . குறள். 1110.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக