ஞாயிறு, 11 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 8 - 9

கலித்தொகை – அரிய செய்தி – 8 - 9
மகாபாரதம்
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் …………….
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 25 :  1- 2
ஒளிமிக்க சூரிய மண்டிலத்திற்கு வடமொழியில் பகன் என்றொரு பெயர் உண்டு ; அந்தப் பகன் கண்ணில்லாதவன் ; அவனைப் போன்று கண்ணற்ற முகத்தினை உடையவன் திருதராட்டிரன்  அவனுடைய மூத்த மகன் துரியோதனன்.
 கலித்தொகை – அரிய செய்தி – 9

காதலர்ப் புணர்ந்த கதுப்புப் போல் கழல்குபு
தாதொடும் தளிரொடும் தண் அறல் தகைபெற
 பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 27:  5- 6

 கலவிக் களிப்பிலே திளைத்த மகளிரின் கூந்தலைப் போல ;  தண்ணிதாகிய அறுதியை உடைய மணல் – கழன்று வீழ்ந்த தாதாலும் தளிர்களாலும் அழகு பெற விளங்கிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக