ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 7

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 7
ஐங்குறுநூறு – கலித்தொகை ; ஒப்பு நோக்கு
 நல்லோர் ஆங்கண் பரந்து …………… எனத் தொடங்கும் ஐங். 390 ஆம் பாடலின் கூற்று விளக்கம். “ தலைவி புணர்ந்துடன் போனபின் ; பிரிவாற்றாத செவிலி பலரையும் வினவினாள். அதுகண்ட வழிச் செல்வார் தாம் அவளைக் கண்டதனை  “ திந்தோள் வல்விற் காளையொடு ; கண்டனம் சுரத்திடை யாமே “  என்று அவட்குச் செல்லியது.” என்பதாம்.
 கலித் தொகை
 “ எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய…….. ” எனத் தொடங்கும் கலித்தொகை 9 ஆம் பாடலின் கூற்று விளக்கம் – “ தலைவனும் தலைவியும் உடன் போக்கில் சென்றனர்; தேடிச் சென்ற செவிலி வழியிடை முக்கோற்பகவரைக் கண்டு ;  என் மகள் ஒருத்தியும் பிறன் மகன் ஒருவனும் ;தம்முளே புணர்ந்த  அறிபுணர்ச்சியர் ; அன்னார் இருவரைக் காணீரோ “ என  வினவினள் ” காணேம் அல்லேம் கண்டனம் கடத்திடை; ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய … எனத் தொடரும்.
 சிலம்பு கழி
நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நல் மணம் கழிக ….
  ஓதலாந்தையார். ஐங். 399 : 1 -2
 உடன் போக்கில் தலைவியைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான் தலைவன்;  தலைவனை ஈன்ற தாய்க்கு “ உன்னுடைய இல்லத்தில் தலைவிக்குச் சிலம்பு கழிக்கும் நோன்பினைச் செய்தாலும் எம் மனையில் திருமணச் சடங்கினைச் செய்க “ என நீவிர் அவளுக்கு உரைத்தால் உங்கட்கு வரும் இழுக்கு என்னையோ ? கூறுக.

 ( பெண்பாலார்க்கு மணமாகா முன்பு பெற்றோர் அணிவிக்கும் கன்னிச் சிலம்பினைத் திருமணத்திற்கு முன்னர் கழிப்பது ஒரு மரபாகும். அதனைச் “ சிலம்பு கழி” என வழங்குவர். இதனைத் தாய் தன் இல்லத்தில் நிகழ்த்துவதனை ஒரு செல்வமாகவே கருதுவாள். சிலம்புகழி நோன்பின்போது மணமகள் உண்ணா நோன்பு இருத்தல் மரபு. ) 4/10/15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக