வியாழன், 1 அக்டோபர், 2015

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 3 - 4

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 3 - 4  
நோய்க்கு மருந்தாவாள்
……………………. இவள்
நோய்க்கு மருந்து ஆகிய பணைத் தோளோளே.
  ஓரம்போகியார். ஐங். 99 : 3 -4
இவள் யானுற்ற காம நோய்க்கு மருந்தாகும் பருத்த தோள்களை உடையவள்.களவுக் காலத்தில் என் நோய்க்கு மருந்தான இவள் பருத்த தோள்கள் ; இப்பொழுதும் மருந்தாகின்றன என்று பாராட்டினான்.
குறிஞ்சித் திணை - கபிலர்
ஐங்குறுநூறு – அரிய செய்தி – 4
குடுமித் தலை
 …………………….. நம் ஊர்ப்
 பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
 நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.
கபிலர். ஐங். 202 : 1 – 4

 அன்னாய் ! நம் காதலனாகிய நெடிய மலை நாட்டுக்குத் தலவன்  தேரை ஈர்த்துவரும் குதிரைகளும் நம்மூர்ப்  பார்ப்பனச் சிறார் போலவே தாமும் குடுமித் தலையை உடையவாயின ; அதனைக் காண்பாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக